பிரபல நடிகர் நம்பியார் காலமானார்
இந்தியாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான எம் என் நம்பியார் புதன்கிழமை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் மஞ்சேரி நகரில் ஒரு பாரம்பரியமான நம்பியார் குடும்பத்தில் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி பிறந்தார் நம்பியார்.
மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதே அவரது முழுப் பெயர். தனது 13 ஆவது வயதில் தமிழ் நாட்டில் பிரபலமாக விளங்கிய பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவில் இணைந்து தனது கலை வாழ்க்கையை தொடங்கினார் நம்பியார்.
1935 ஆம் ஆண்டு பக்த ராமதாஸ் எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த நம்பியார் அவர்கள், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.
ஒரு ஆங்கிலத் திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நம்பியார் நடித்துள்ளார். வில்லன் பாத்திரத்திலேயே பெருமளவில் நடித்த அவர் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்தார் என்று திரை விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ் திரையுலகின் பிரபலங்களான எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற பலரது திரைப்படங்களில் அவர்களுடன் வில்லனாக நடித்துள்ளவர் நம்பியார்.
ஏழு தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமையும் அவருக்கு உண்டு. திரைப்படங்களில் முரட்டுத்தனமான வில்லன் பாத்திரத்தை ஏற்று அவர் நடித்திருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் மிகவும் அதீதமான தெய்வ பக்தி கொண்ட ஒரு மென்மையான மனிதராகவே அவர் திகழ்ந்தார்.
சபரிமலை ஐயப்பனின் தீவிர பக்தரான எம் என் நம்பியார் தொடர்ந்து பல ஆண்டுகாலம் அந்த ஆலையத்துக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். இந்தியாவின் பல மாநிலங்களிலுள்ள நடிகர்களையும் அங்கு அழைத்துச் சென்றவர் அவர்.
திகதி:20 11 2008 - 06:14:49 நிருபர்:001
ராதிகாவுக்குப் பதவி தர சமத்துவ மக்கள் கட்சி கோரிக்கை
நடிகை ராதிகா சரத்குமாரை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் முழுமையான அளவில் ஈடுபடுத்த வேண்டும். அவருக்கு முக்கியப் பதவி வழங்க வேண்டும் என்று கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளது.
விஜயகாந்த்தைத் தொடர்ந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார் சரத்குமார். அவரது கட்சி வளர்ச்சியில் ராதிகாவும் முக்கியப் பங்காற்றி வருகிறார். சரத்குமாருக்குப் பக்க பலமாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் ராதிகாவுக்கும் முக்கியப் பொறுப்பு கொடுத்து அவரை கட்சிப் பணியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என்று மத்திய சென்னை கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை சரத்குமாரிடம் வழங்கியுள்ளனர்.
திகதி:09 11 2008 - 08:53:01 நிருபர்:001
யுகபாரதிக்கு கல்யாணம்
கவிஞர் யுகபாரதிக்கு 23ம் தேதி தஞ்சையில் கல்யாணம் திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதிக்கு தஞ்சையில் வருகிற 23ம் தேதி கல்யாணம் நடைபெறுகிறது. தஞ்சையைச் சேர்ந்த அன்புச் செல்வியை அவர் மணக்கிறார். திருமணத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு நடத்தி வைக்கிறார். ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் யுகபாரதி. அப்படத்தில் இடம் பெற்ற பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் யுகபாரதிக்கு பெரும் புகழைத் தேடி தந்தது.
திகதி:09 11 2008 - 08:50:49 நிருபர்:001
கீதை-ரஜினி விளக்கத்துக்கு யாதவர் சங்கம் கண்டனம்
சமீபத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பின்போது ''கடமையைச் செய்; பலனை எதிர்பார்'' என்று போர்ட் எழுதி வைத்திருந்தார் ரஜினி.
மேலும் ரசிகர்கள் மத்தியில் அவர் பேசுகையில், கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்கிறார்கள். ஆரம்பத்தில் நான்கூட அப்படித்தான் நெனச்சேன். ஆனா யோசிச்சுப் பார்த்தேன். இந்த உபதேசம் சாதாரண மக்களுக்கு அல்ல. அதுக்கும் அடுத்த ரேஞ்சுக்குப் போய்ட்ட மகான்கள், வீரர்களுக்குத்தான் சரியா இருக்கும்.
வெளிநாடுகள்லே சொல்றதே, கடமையை செய்; பலனை எதிர்பார் என்றுதான்.
திகதி:07 11 2008 - 06:50:12 நிருபர்:001
பெப்சி உண்ணாவிரதம்: இன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!
இலங்கையில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (ஃபெப்சி) இன்று உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்காத நடிகர், நடிகைகள், தனியாக 1ம் தேதி உண்ணாவிரத போராட்டம் இருந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து பெப்சி அமைப்பினரும் இன்று உண்ணாவிரதம் இருந்து இலங்கைத் தமிழர்களுக்கு தங்கள் ஆதரவையும், சிங்கள ராணுவத்துக்கு எதிர்ப்பையும் தெரிவிக்கின்றனர்.
திகதி:05 11 2008 - 05:43:17 நிருபர்:001
பாடகி எஸ். ஜானகிக்கு தேசிய விருது
|
பாடகி பி. சுசீலாவின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அறக்கடளை சார்பில் பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகிக்கு, 1 லட்சம் ரூபா ரொக்கப் பரிசு அடங்கிய பி.சுசீலா தேசிய விருது வழங்கப்படவுள்ளது.
இசைத்துறையில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு விருதும், நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவியும் செய்யும் நோக்குடன் பாடகி பி. சுசீலா தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்துள்ளார். மேலும், இசைத்துறைக்கென தனி நூலகம் ஒன்றையும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து பாடகி பி. சுசீலா சென்னையில் நேற்று நிருபர்களுக்களித் பேட்டியில், இவ்விருது ஆரம்பிக்கப்பட்டு முதல் ஆண்டுக்கான விருது, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பாடி சிறப்பு பெற்ற எஸ். ஜானகிக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருது எனது பிறந்த நாளான நவம்பர் 13ஆம் திகதி ஐதராபாத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்றார் |
திகதி:04 11 2008 - 07:21:29 நிருபர்:001
ரஜினி-கமல், நடிகர்கள் நாளை பேசா உண்ணாவிரதம்?
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவழியாக சம்மதம் தெரிவித்துள்ளனர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும், ஒரு நிபந்தனையோடு!.
உண்ணாவிரத்தில் மைக் கட்டி பேசக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. கிட்டத்தட்ட இதே நிபந்தனையை தமிழ அரசும் விதித்துள்ளது!!.
இந்த நிபந்தனையின் நோக்கம் யாரும் புரிந்து கொள்ளக் கூடியதே.
சில மாதங்களுக்கு முன் ஓகேனக்கல் பிரச்சனை தொடர்பான உண்ணாவிரததில் பங்கேற்ற நடிகர்கள் பலர், குறிப்பாக சத்யராஜ் உணர்ச்சி வசப்பட்டு, கட்டுப்பாடில்லாமல் சில வார்த்தைகளைப் பிரயோகிக்க, அதனால் டென்ஷனான ரஜினி 'உதைக்கணும்' என்றெல்லாம் பேசப்போய், அதற்கு குசேலன் என்ற படமே பலியானதும் அனைவருக்கும் தெரிந்த சமாச்சாரங்கள்.
திகதி:30 10 2008 - 10:26:56 நிருபர்:001
ஏகன்- பட விமர்சனம்
நடிப்பு: அஜீத், நயனதாரா, ஜெயராம், சுமன், நவ்தீப், பியா, நாசர்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம்: ராஜூ சுந்தரம்
தயாரிப்பு: அய்கரன் இண்டர்நேஷனல்
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வந்துள்ளது அஜீத்தின் ஏகன்.
என்னதான், இந்தப் படத்தை ஷாரூக்கின் மெய்ன் ஹூன் நா ரீமேக் இல்லை என ராஜூ சுந்தரம் சத்தியமடித்தாலும், காட்சிக்குக் காட்சி ஷாரூக்கின் படம்தான் நினைவுக்கு வருகிறது. ஆனால், இந்தியை விட தமிழில் மிக சுவாரஸ்யமாகச் செய்திருக்கிறார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்.
திகதி:28 10 2008 - 10:12:33 நிருபர்:001
ஏகன் இந்தி ரீமேக் அல்ல!-ராஜு சுந்தரம்
ஷாரூக்கான் நடித்த இந்திப் படம் 'மெய்ன் ஹூன் நா'வின் ரீமேக் அல்ல ஏகன் என்று கூறியுள்ளார் அப்படத்தின் இயக்குநர் ராஜுசுந்தரம்.
அய்ங்கரன் தயாரிப்பில் அஜீத் - நயன்தாரா நடித்து தீபாவளி வெளியீடாக வரும் படம் ஏகன். பில்லாவுக்குப் பின் வரும் படம் என்பதால் அஜீத் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது இப்படம்.
திகதி:25 10 2008 - 09:27:08 நிருபர்:001
இமயமலைக்குப் பறந்த ரஜினி
மேலும் புதிய படங்கள்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு பாபா குகைக்குச் செல்கிறாராம்.
திகதி:22 01 2008 - 03:56:45 நிருபர்:001
|