- வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) -

நா இனிக்கத் தமிழ் வரைந்த
பா உலகக் குரு இவன்.
சா இல்லாக் கவி உலகினுள்
வா என்று பலரை இழுத்தவன்.
மா கவிஞன் பிறந்த நாளுக்காய்
பா எழுதுகிறேன் பரவசம் கொண்டு.
ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தேழில்
ஆனித் திங்கள் இருபத்தி நான்கில்
அவனியில் உதித்த வித்தகன் முத்தையா.
அறிமுகமானான் பின் அரசவைப் புலவராயும்.
அர்த்தமுள்ள இந்துமதம், யேசு காவியம்
முற்றுப்பெறாத காவியங்களால் விசுவரூபமானான்.
சந்தக் கவியின் சொந்தக்காரன்
இவன்.
சுந்தரப் புதையல் சிறுகூடல் பட்டிக்கு.
செந்தமிழ் மகரந்தம் சிந்தி உலகிற்;குப்
பந்தி விரித்தான் சினிமா விருந்தில்.
சொந்தம், தத்துவம், சமயம் கதம்பமாய்
சிந்தை நிறைத்த தேனருவி கண்ணதாசன்.