காந்தி தொடர்பான புதியநூலை தடைசெய்ய இந்திய அரசு பரிசீலனை "வேண்டாம்';பேரன் ராஜ்மோகன் காந்தி
ஜோசப் லெலிவெல்டின் "உன்னத ஆத்மா;மகாத்மா காந்தியும் அவரின் போராட்டமும்' (எணூஞுச்t ண்ணிதடூ; Mச்டச்tட்ச் எச்ணஞீடடி ச்ணஞீ டடிண் குtணூதஞ்ஞ்டூஞு தீடிtட டிணஞீடிச்) என்ற நூலை தடை செய்வது குறித்து இந்திய அரசாங்கம் பரிசீலிக்கும் என்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்திருக்கும் நிலையில் அந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டாமென்று மகாத்மா காந்தியின் பேரனான ராஜ்மோகன் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திகதி:31 03 2011 - 03:58:09 நிருபர்:001
வெள்ளைக்கொடி விசாரணை நாளைவரை ஒத்திவைப்பு
சிறையிலிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா சுகவீனமுற்றிருப்பதால் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்துக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டதால் வெள்ளைக்கொடி விவகார வழக்கு நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
திகதி:31 03 2011 - 03:53:38 நிருபர்:001
யாழ் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வசந்தி அரசரட்ணம்
மும்பையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் இந்தியா-இலங்கை இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார்.
திகதி:31 03 2011 - 03:45:11 நிருபர்:001
யாழ் பல்கலைக்கு முதல் பெண் துணைவேந்தர்
யாழ் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வசந்தி அரசரட்ணம் இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முதுநிலை பேராசிரியை வசந்தி அரசரட்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.
திகதி:31 03 2011 - 03:39:52 நிருபர்:001
கிழக்கு பல்கலை காலவரையின்றி மூடப்பட்டது
கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமூலை வளாகத்திலுள்ள பொலிஸ் காவல் நிலையத்தை அகற்றுமாறு கோரி மாணவர்கள் புதன்கிழமை மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் (மட்டக்களப்பு நகரிலுள்ளது) தவிர்ந்த அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதோடு உள்வாரி மற்றும் வெளிவாரி விரிவுரைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
திகதி:31 03 2011 - 03:38:59 நிருபர்:001
லங்கா ஈ நியூஸ் செய்தியாசிரியர் கைது
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் பென்னட் ரூபசிங்க வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இவர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
திகதி:31 03 2011 - 03:29:21 நிருபர்:001
ஐ.நா. நிபுணர் குழு இலங்கையில் விசாரணை நடத்தவே முடியாது; அடித்துக் கூறுகிறார் ஜனாதிபதி மஹிந்த
போர்க் குற்றங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழு இலங்கையில் விசாரøண நடத்த ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. வேண் டுமானால் நிபுணர் குழுவினர் வந்து நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட் சியம் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
திகதி:29 03 2011 - 03:28:58 நிருபர்:001
வடக்குக்கு செய்தியாளர்களை அனுமதிக்காதது ஏன்? ஊடகப் பணிப்பாளரிடம் ஜனாதிபதி காட்டமாகக் கேள்வி
வடபகுதிக்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படாதது ஏன் என்று தேசியப் பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளரைக் கடிந்து கொண்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இனிமேல் அப்படி எதுவும் நடைபெறாமல் தான் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் உறுதி அளித்தார்.
திகதி:29 03 2011 - 03:26:12 நிருபர்:001
நிபந்தனையற்ற அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாவுடன் மொத்த நாட் சம்பளமாக 750 ரூபா வழங்க வேண்டும் மனோ கணேசன் கோரிக்கை
நிபந்தனையற்ற அடிப்படைச் சம்பளமாக ஐநூறுரூபாவுடன் மேலதிக ஊக்குவிப்புச் கொடுப்பனவாக ரூபா இருநூற்றம்பதையும் சேர்த்து மொத்த நாட்சம்பளமாக 750 ரூபா தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க,தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உடன்படவேண்டும்.
திகதி:29 03 2011 - 02:50:08 நிருபர்:001
இறப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து
வெலிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உடுகவ சார்லிமௌன்ட் தோட்டத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திகதி:28 03 2011 - 14:33:15 நிருபர்:001
டெங்கு நோயைக் கட்டுப்படுத்த வவுனியாவில் விசேட நடவடிக்கை
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் எதிர் காலத்தில் டெங்குநோயைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட செயற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக வவுனியாப் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பி. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
திகதி:08 03 2011 - 02:31:08 நிருபர்:001
கூட்டமைப்பினரை அச்சுறுத்தவே சிறிதரன் மீது நேற்றுத் தாக்குதல் மாவை சேனாதிராசா கடும் கண்டனம்
கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அச்சுறுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மீதான தாக்குதலை நோக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. நேற்றைய தாக்குதலுக்கான கூட்டமைப்பின் கடும் கண்டனத்தையும் அவர் உதயனிடம் வெளிப்படுத்தினார்.
திகதி:08 03 2011 - 02:29:18 நிருபர்:001
எனக்கு இன்னமும் சுதந்திரமில்லை ஜனாதிபதி
30 வருடங்களின் பின்னர் யுத்தம் நிறைவடைந்து நாட்டு மக்கள் சுதந்திரத்தை அனுபவித்தாலும் தன்னால் இன்னும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது போயுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். கேகாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
திகதி:08 03 2011 - 02:11:31 நிருபர்:001
ஸ்பெக்ட்ரம் ஊழலிலிருந்து விலக காங்கிரஸ் விரும்பியது ஈழத்தமிழர் படுகொலை பழியிலிருந்து தப்ப தி.மு.க. நினைத்தது இதுவே பிளவுக்குக் காரணம் என்கிறார் பழ.நெடுமாறன்
ஸ்பெக்ட்ரம் ஊழலிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள காங்கிரஸ் விரும்பியது.ஈழப்படுகொலை பழியிலிருந்து தப்பித்துக்கொள்ள தி.மு.க.நினைத்தது.இதுவே இந்த இரு கட்சிகளின் பிளவுக்கும் காரணமே தவிர தொகுதிப் பங்கீடு சர்ச்சை காரணமல்ல என்று கூறியுள்ளார் மக்கள் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன்.
திகதி:08 03 2011 - 01:46:44 நிருபர்:001
ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்-திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!-வைகோ
ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சிக்கும், அதற்குத் துணை போன திமுகவுக்கும் வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திகதி:07 03 2011 - 04:26:51 நிருபர்:001
|