பழைமைமிக்க இலக்கியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன : பேரா. ஜோர்ஜ் ஹார்ட்
உலகத் தமிழச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் ஆய்வுக் கட்டுரையொன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிய ஜோர்ஜ் ஹார்ட், சிறப்பான இலங்கியங்கள் தொன்மைத்தன்மை நிறைந்த தமிழ்மொழியில் மாத்திரமே உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
"உலகில் பல்வேறு மொழிகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் அவை எல்லாம் பழைமையான இலங்கியங்களைக் கொண்டிருப்பதில்லை. ஆனால் தமிழ் மொழியானது பழங்கால இக்கியங்களுடன் சீராக வளர்ச்சி பெற்று வருகிறது.
வெளிநாட்டு ஆய்வாளர்கள் தமிழ்மொழி குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழின் தொன்மை கூறும் சான்றுகளை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
-கோவையிலிருந்து எமது செய்தியாளர்
திகதி:27 06 2010 - 03:42:33 நிருபர்:001