ஜனாதிபதி நாளை உக்ரேய்ன் பயணம்
தெற்காசிய வலயமொன்றின் தலைவர் ஒருவர் உக்ரேய்னுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் சந்தர்ப்பம் எனக் கூறப்படுகிறது.
உக்ரேய்ன் ஜனாதிபதி விக்டர் யானுக்காச் மற்றும் உக்ரேய்ன் பிரதமர் உள்ளிட்ட அந்நாட்டு அரசியல் முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான முனைப்புக்கள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் உக்ரேய்னுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
திகதி:28 06 2010 - 11:08:40 நிருபர்:001