முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






இலங்கை-இந்திய உறவுக்குப் பாலமாக சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகம்
மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், நேற்று இலங்கைக்கு அரசு பயணம் ஒன்றை மேற்கொண்டார். அப்போது, இலங்கை அதிபர் ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசினார்.

அதையடுத்து அவர் அளித்த பேட்டியில்,

"இலங்கை அதிபரையும், பிற தலைவர்களையும் சந்தித்த பின், மத்தியபிரதேச மாநில தலைநகர் போபால் அருகிலுள்ள சாஞ்சியில், 65 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச புத்த பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகம், கூட்டு முயற்சியில் அமையும். இதற்காக மாநில அரசு ஐந்து கோடி ரூபா ஒதுக்கும். இந்திய - இலங்கை உறவு உறுதியானது.

மாநில அரசு, இலங்கையுடனான வர்த்தகத் தொடர்பை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும்.பல்கலைக்கழகம் எப்படி அமைய வேண்டும் என்று முடிவு செய்வதற்கான கமிட்டி ஒன்றை அமைப்பதற்கு ராஜபக்ஷ சம்மதித்துள்ளார்.

இப்பல்கலைக் கழகத்தோடு இணைந்து செயல்பட பௌத்த நாடுகளான ஜப்பான், கொரியா உள்ளிட்டவை விருப்பம் தெரிவித்துள்ளன" என்று தெரிவித்தார். திகதி:28 06 2010 - 11:12:30 நிருபர்:001
அச்சு வடிவம் |




தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்