முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






ஐநா நிபுணர் குழுவைச் சந்திக்கத் தயார் : ஜெனரல் சரத்
யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் சந்தேகம் எழுந்தால் அதனை நிவர்த்திக்க சம்பந்தப்பட்ட நாடு முன்வர வேண்டியது அவசியம்.

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் முறுகல்களை ஏற்படுத்திக் கொள்ள நாம் ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது.

இலங்கைப் பிரஜை என்ற ரீதியில் இவ்வாறான விசாரணைகளுக்கு முழு ஆதரவளிக்க நான் என்றும் தயங்கப் போவதில்லை.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனைகள் நியாயமானவை. அதனை உள்விவகாரத் தலையீடாகக் கருதத் தேவையில்லை" என்றார்.

அதேவேளை, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், நிபுணர்கள் குழு இலங்கை வர அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனவும் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. திகதி:30 06 2010 - 06:29:44 நிருபர்:001
அச்சு வடிவம் |




தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்