முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






கிரிக்கெட் ஸ்டேடியத்தின் 150 அடி உயர மின் கம்பத்தில் சிக்கிய இருவர் மீட்பு
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள 150 அடி உயர மின் கம்பத்தில் மாட்டிக் கொண்ட 2 பேர், மூன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. இந்த ஸ்டேடியத்தில் டிசம்பர் 5 முதல் 10-ந் தேதி வரை ஐ.பி.எல். சாம்பியன் லீக் 20/20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

அனைத்து போட்டிகளும் இரவு போட்டிகள் என்பதால், கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள 4 பிரமாண்ட மின்விளக்குகளிலும் நேற்று பராமரிப்பு பணிகள் நடந்தன. இந்த பணியை தேனாம்பேட்டையில் உள்ள பாரன் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஏற்றுள்ளது.
திகதி:21 11 2008 - 10:24:36 நிருபர்:001
என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை-கங்குலி
என்னை யாருமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. தவறாகவே புரிந்து கொண்டுள்ளனர் என்று இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமை கொண்ட சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இந்தியாவின் பவர்புல் கேப்டன் என்ற பெருமையைக் கொண்டவர் கங்குலி. நேற்று முடிந்த நாக்பூர் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் கங்குலி.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 40 சதவீத சராசரியைக் கொண்டவர் கங்குலி.

தனது ஓய்வு குறித்து செய்தியாளர்களிடம் கங்குலி பேசுகையில், என்னை அனைவருமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. தவறாகவேப் புரிந்து வைத்துள்ளனர்.

திகதி:11 11 2008 - 19:24:48 நிருபர்:001
டெல்லியில் இந்தியா - ஆஸி. 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்குகிறது. 2வது போட்டியில் அபாரமாக வென்ற தெம்பில் இந்தியாவும், பதிலடி தர வேண்டும் என்ற இக்கட்டான நிலையில், ஆஸ்திரேலியாவும் நாளைய போட்டியை சந்திக்கவுள்ளன.

பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்து வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்தது. மொஹாலியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இதனால் ஆஸ்திரேலியா பெரும் அதிர்ச்சி அடைந்தது. இந்த பின்னணியில் நாளை 3வதுடெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்குகிறது.
திகதி:28 10 2008 - 10:21:16 நிருபர்:001
இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் சுனாமி பீதி ஏற்பட்டு மக்கள் ஓட்டம் பிடித்தனர்.
திகதி:23 01 2008 - 09:27:49 நிருபர்:001
India thwart Australian record bid
India ended Australia's brave bid for a record 17th consecutive Test victory by claiming a 72-run win in the third match at the WACA in Perth and reducing the tourists' series deficit to 2-1.
திகதி:19 01 2008 - 17:01:59 நிருபர்:001
தேசியக்கொடி அவமதிப்பு சானியா மீது மேலும் ஒரு வழக்கு
தேசியக்கொடியை அவமதித்ததாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மீது மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திருப்பதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹப்மேன் கோப்பை போட்டியின்போது தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் சானியா அமர்ந்திருந்த புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது.இது தொடர்பாக சானியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதியிலும் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

திகதி:09 01 2008 - 11:13:13 நிருபர்:001
ஹைடனின் சாதனைகள் தொடர்கிறது சொந்த மண்ணில் 20 சதங்கள் அடித்தார்
இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான சிட்னி டெஸ்டின் 4 ஆம் நாள் ஆட்டத்தில் சில முக்கிய அம்சங்கள்
நடுவர்கள் திருந்தவில்லை
திகதி:07 01 2008 - 05:50:52 நிருபர்:001
நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் பங்களாதேஷ் அணி புதிய சாதனை
பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்ஸில் நியூசிலாந்து அணி 357 ஓட்டங்கள் குவித்துள்ளது.
நியூசிலாந்து- பங்களாதேஷ் அணிகளிடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் துனிடனில் நடந்து வருகிறது.
திகதி:07 01 2008 - 05:50:01 நிருபர்:001
அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அபாரம் கடைசி நிமிடத்தில் தோல்வியுற்றது இந்தியா
இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாது இந்திய அணி 123 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியை டிரா செய்யும் வாய்ப்பு பெரிதுமிருந்த போதும் இந்திய துடுப்பாட்ட வீரர்களால் இயலாது போய்விட்டது.
திகதி:07 01 2008 - 05:48:51 நிருபர்:001

 


தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்