முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






ஜப்பான் 1-0 காமரூன்: ஆப்பிரிக்க சிங்கம் ஆசியாவிடம் அசிங்கம்
இரு அணியிலுமே நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் காமரூனின் இன்டர்மிலான் 'ஸ்டிரைக்கர்' சாமுவேல் ஈடோ பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார் காமரூனின் முன்களம் ஈடோவை நம்பியே சுழலும்.கிளப் ஆட்டங்களில் ஜொலிக்கும் சாமுவேல் ஈடோ தாய்நாட்டுக்காக ஆடும் போது சோடை போய்விடுகிறார் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் ரோஜர் மில்லா உலக கிண்ணத்துக்கு முன் விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஈடோவுக்கு இருந்தது.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டம் ஒரு கட்டத்தில் மந்தநிலை அடைந்தது. கடமைக்கு இரு அணி வீரர்களும் ஆடினார்கள்.ஜப்பான் வீரர்கள் கொஞ்சம் பரவாயில்லை. அவ்வப்போது காமரூன் கோல் கம்பத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். முதல் பாதியில் 39ஆவது நிமிடத்தில் ஜப்பான் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. மாட்சூயி கொடுத்த பாசை பெற்ற ஹோண்டா எளிதாக அதனை கோலாக மாற்றினார்.முதல் பாதி ஜப்பான் முன்னிலையுடன் முடிவுற்றது.

பிற்பாதி ஆட்டம் துவங்கியதும் காமரூன் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். தொடர்ந்து ஜப்பான் கோல்கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். 86ஆவது நிமிடத்தில் காமரூன் வீரர் மபியா அடித்த பந்து இடது கோல்கம்பத்தில் மோதி வெளியேறியது. கொஞ்சம் கீழே சென்றிருந்தாலும் கோலுக்குள் புகுந்திருக்கும் காமரூனுக்கு அதிருஷ்டம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இறுதி 5 நிமிடங்களில் பதில் கோல் திருப்ப காமரூன் கடும் போராட்டம் நடத்தியது.ஆனால் ஜப்பான் கோல்கீப்பர் கவாஸாகி அத்தனை வாய்ப்புகளையும் அற்புதமாக தடுத்து விட்டார். ஆட்ட நேர இறுதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

உலக கோப்பை போட்டியில் வெளிநாட்டு மண்ணில் ஜப்பான் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.ஏற்கனவே ஆசிய அணியான தென்கொரியா கிரீஸ் அணியை தோற்கடித்துள்ளது. இப்போது ஜப்பானும் வெற்றி பெற்றிருப்பது ஆசியாவின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. திகதி:14 06 2010 - 15:34:17 நிருபர்:001
அச்சு வடிவம் |

 


தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்