முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






ஆரஞ்சுக்கு இனிப்பான துவக்கம் டென்மார்க் தோல்வி
உலக கிண்ண கால்பந்து போட்டியில் இன்று நடந்த இ பிரிவு ஆட்டத்தில் ஐரோப்பிய சூப்பர்ஸ்டார்கள் அடங்கிய நெதர்லாந்து டென்மார்க் அணியை சந்தித்தது. இந்த போட்டி ஜொகன்ஸ்பர்க்கில் உள்ள சாக்கர்சிட்டி மைதானத்தில் நடந்தது.

போட்டியை காண ஆயிரக்கணக்கான நெதர்லாந்து ரசிகர்கள் அந்த அணியின் ஆரஞ்சு வர்ண உடை அணிந்து வந்திருந்தனர்.இதனால் மைதானமே ஆரஞ்சு வர்ணமாக காட்டிசியளித்தது. இந்த போட்டியில் நெதர்லாந்தின் நட்சத்திர வீரர் ஆர்ஜான் ராபன் காயம் காரணமாக விளையாடவில்லை.

போட்டி ஆரம்பம் முதல் நெதர்லாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். முதல் பாதியில் நெதர்லாந்து வீரர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. பிற்பாதி ஆட்டம் ஆரம்பமாகியதும் டென்மார்க் அணிக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. நெதர்லாந்து வீரர் வான் பார்சி டென்மார்க் பெனால்டி ஏரியாவுக்குள் பந்தை அந்தரத்தில் கிராஸ் செய்தார்.அந்தரத்தில் மிதந்து வந்த பந்தை டென்மார்க் வீரர் சைமன் பால்சன் தவறாக கணித்து முட்டினார். அவரது தலையில் பட்ட பந்து நேரே டென்மார்க் கோல்கம்பத்துக்குள் புகுந்தது இதனால் டென்மார்க் நொந்தது. இந்த கோல் மூலம் நெதர்லாந்து 1-0 என்று முன்னிலை பெற்றது. தொடர்ந்து 85வது நிமிடத்தில் நெதர்லாந்து மற்றொரு கோல் அடித்தது. ஸ்வெஸ்னிட்ஜ்கர் கொடுத்த பாசை வாங்கிய எலியா டென்மார்க் கோல் கம்பத்தை நோக்கி தள்ளினார்.ஆனால் கோல்கம்பத்தில் பட்டு திரும்பிய பந்து மற்றொரு நெதர்லாந்து வீரர் டர்த் குயித்துக்கு கிடைக்க அவர் எளிதாக கோலாக மாற்றினார்.இறுதி வரை போராடிய டென்மார்க் அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. திகதி:14 06 2010 - 15:37:44 நிருபர்:001
அச்சு வடிவம் |

 


தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்