உதைப் பந்து போரில் ஹோன்டர்ஸை வீழ்த்தியது சிலி
1962 ஆம் ஆண்டுக்கு பிறகு சிலி உலக கிண்ணத்தில் வெற்றி பெறவில்லை. எனவே இன்றை போட்டியில் வெற்றி பெறும் வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு களமிறங்கி இருந்தது. இந்நிலையில் உதைப் பந்தாட்டத்தையே பாரம்பரியமாக கொண்ட ஹோன்டர்ஸ் அணி கடந்த 1982ஆம் ஆண்டு ஸ்பெயின் அணியை 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்து உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றதோடு 2001ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா போட்டியில் பிரேசிலை தோல்வியுற செய்து 3ஆவது இடத்தை பெற்றிருந்தது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்தமை நனவாகியிருந்தது.
இன்றைய போட்டியில் ஆரம்பம் முதலே மிக விறுவிறுப்பாக விளையாடிய சிலி அணிக்கு பல கோல் வாய்ப்புகள் கிடைத்த போதும் 34ஆவது நிமிடத்திலேயே தனது கோலை போட்டது.
சிலி வீரர் இஸ்லா அபாரமாக பந்தை முன்னே கொண்டு வந்து அதனை அடிக்க, பந்தை போஷ_ர் என்பவர் கோலாக மாற்றினார்.
39-வது நிமிடத்தில் ஹோன்டர்ஸ் வீரர் நுனேஸ் ஒரு அடி அடித்தப் போதும் அது கோல் கம்பத்தை விட்டு விலகிச் சென்று விட்டது.
இடைவேளை தருணத்தில் அதாவது 45ஆவது நிமிடத்தில் ஹோண்டுராஸ் அணிக்கு பல கோல் வாய்ப்புக்கள் கிடைத்தப் போதும் அவையனைத்தும் சிலி அணியின் கோல் காப்பாளர் தடுத்து நிறுத்தினார்.
எனவே சிலியின் 1- 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து உலகக் கிண்ணத்தில் இரசிகர்களின் மத்தியில் சிலி அணி மீது தனித்துவம் ஏற்பட்டுள்ளது. ,
திகதி:16 06 2010 - 17:05:58 நிருபர்:001