ஐரோப்பிய சாம்பியன் சுவிட்சர்லாந்திடம் கவிழ்ந்தது.
டர்பன் நகரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியை, தரவரிசையில் 24 ஆவது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற செய்தது.
இதுவரை ஸ்பெயின் அணிக்கு எதிரான எந்த போட்டியிலும் சுவிட்சர்லாந்து வெற்றி பெற்றது இல்லை. எனவே அந்த பழியை தீர்த்தும் கொள்ளும் வகையில் இன்றைய போட்டியில் ஸ்பெயினை தோல்வியுற செய்தது.
எனவே இந்த தோல்வியின் மூலம் உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புடைய அணி என்று இரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின், 2010 உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளது.
போட்டியில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி ஐரோப்பாவின் பல நட்சத்திர வீரர்களையும் , பல அனுபவமிக்க வீரர்களையும் தன்னகத்தே கொண்ட போதும் தனக்கு கிடைத்த பல கோல் வாய்ப்புகளை தவறவிட்டமையால் தோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
முதல் பகுதி போட்டியில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இருப்பினும் போட்டியின் இரண்டாவது பகுதியில், 52ஆவது நிமிடத்தில், ஸ்பெயினின் எல்லைக்குள் வந்து விழுந்த பந்தை சுவிடன் வீரர் எரன் டெர்டியோக் கோலை நோக்கி அடிக்க, அதனை மேலேறி வந்த ஸ்பெயின் கோலி காசில்லாஸ் தடுத்தார். அது அவருடைய கையில் இருந்து நழுவிச் செல்ல அதற்கெனவே காத்திருந்ததைப் போல ஓடிவந்த கெல்சன் பெர்ணான்டஸ் அதை கோலுக்குள் தட்டிவிட்டார். எனவே இந்த கோல் மூலம் ஸ்பெயினின் வெற்றி திசை திரும்பி விட்டது.
இருப்பினும் சோர்வுக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஸ்பெயின் வீரர்கள் சுவிடன் கோல் கம்பத்துக்கு அருகில் மட்டுமே சென்று வரக்கூடியதாக இருந்தது. ஆனால் கோல் எதுவும் போட கிடைக்காதமையால் இறுதியில் 19 முறை ஸ்பெயினிடம் தோல்வியை தழுவிய சுவிட்சர்லாந்து அணி உலகக் கிண்ண போட்டிகளில் முதல் முறையாக வெற்றியை தனதாக்கி கொண்டது.
இந்நிலையில் அடுத்த நடைபெற உள்ள போட்டியில் இன்று ஒரு கோல் போட்டு ஹோன்டர்ஸை வீழ்த்திய சிலி அணியுடன் பலப்பரிட்சை நடத்த உள்ளது.
இன்றைய போட்டியில் ஸ்பெயின் நடுநிலை விளையாட்டு வீரர் என்ரஸ் இனியஸ்டா காயம் காரணமாக விளையாடாமல் இருந்தமை குறிப்பிடதக்கது.
திகதி:16 06 2010 - 17:07:02 நிருபர்:001