முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






மெக்சிகோ தோல்வி, உருகுவே இரண்டாவது சுற்றுக்கு தகுதி
தென் ஆப்ரிக்க அணிக்கு இணையாக 4 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், வாங்கிய கோல்கள் குறைவாக இருந்தத்தால் ஏ பிரிவில் இருந்து இரண்டாவது அணியாக இரண்டாவது சுற்றிற்குத் தகுதி பெற்றது மெக்சிகோ.

இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில்தான் மெக்சிகோ களமிறங்கியது. அதன் ஆட்டம் அதன் உறுதிப்பாட்டை பிரதிபலித்தது, ஆனால், தென் அமெரிக்க அணியின் தடுப்பாட்ட அரணை உடைத்துக் கொண்டு முன்னேற முடியாத அந்த அணியின் முன்கள விளையாட்டு வீரர்கள் உருகுவே கோலை நோக்கி நடத்திய தாக்குதல்கள் எதுவும் பலனளிக்கவில்லை. சால்சிடோவும், ஆண்ட்ரஸ் கார்டடோவும் அடித்த பந்துகள் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது அவர்களின் துரதிருஷ்டமாகும்.

மாறாக, ஆட்டத்தின் 5ஆவது நிமிடத்திலேயே முதல் வாய்ப்பு உருகுவேக்கு கிடைத்தது. லூயிஸ் சுவாரஸ் அடித்த பந்து, சற்றே இலக்கை விட்டுப் பறந்தது.

இடைவேளை நெருங்கும் தருவாயில், வலது கோட்டிலிருந்து எடின்சன் கவானி தூக்கி அடித்த பந்தை ஓடி வந்து கோலின் ஒரு மூலையை நோக்கி தலையால் முட்டி கோலாக்கினார் சுவாரஸ். அந்த ஒரு கோலே ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயித்துவிட்டது.

போட்டியின் இரண்டாவது பகுதியில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடுவதை விட, மேலும் ஒரு கோல் வாங்கிவிடக் கூடாத என்பதில் அதிக கவனத்துடன் ஆடிய மெக்சிகோ அணியால், அச்சுறுத்தலின்றி விளையாடி வெற்றியுடன் முடித்தது உருகுவே. திகதி:23 06 2010 - 02:15:58 நிருபர்:001
அச்சு வடிவம் |

 


தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்