பீபா கிண்ணத்திற்கான இன்றைய போட்டிகள்
தென் ஆபிரிக்காவில் கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமான உலக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டிகள் மிக விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய தினம் எப் பிரிவிக்கான போட்டிகளில் பரகுவே, நியூசிலாந்து அணிகளும் ஸ்லோவேக்கியா இத்தாலி அணிகளும் இலங்கை நேரப்படி 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.
எப் பிரிவுக்கான புள்ளிகள் அட்டவணையில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் நான்கு புள்ளிகளுடன் பரகுவே அணி முதலாவது இடத்தில் உள்ளது.
இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நடப்புச் சம்பியின் இத்தாலி அவை இரண்டையும் சமநிலையில் முடித்துக்கொண்டுள்ளதுடன் இரண்;டு புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
நியூசிலாந்தும் இரண்டு போட்டிகளையும் சமநிலையில் முடித்துக்கொண்டு இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஸ்லோவேக்கிய அணி இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியையும் மற்றைய போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டு ஒரு புள்ளியுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
பரகுவே நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெற்றாலோ, சமநிலையில் நிறைவடைந்தாலோ பரகுவே அடுத்த சுற்றுக்கு இலகுவாக தெரிவாகும்.
பரகுவே நிய+சிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்றால் அது நடப்புச் சம்பியன் இத்தாலியின் அடுத்த சுற்றை கேள்விக்குறியாக்கும்.
நியூசிலாந்து பரகுவேவை வீழ்த்தினால் இத்தாலி ஸ்வோவேக்கியாவை கட்டாயம் வீழ்த்த வேண்டி ஏற்படும்.
இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இத்தாலி உள்ளது. நியூசிலாந்து பரகுவே போட்டி வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்தால் இத்தாலி ஸ்லோவேக்கியாவுடனான போட்டியை வெற்றிபெற வேண்டும் அல்லது சமன் செய்ய வேண்டும்.
சமன் செய்தாலும் கோல்களின் அடிப்படையிலேயே இத்தாலியின் அடுத்து சுற்று தீர்மானிக்கப்படும் என்பதால் இன்றைய போட்டி மிக விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஸ்லோவேக்கியா இத்தாலியை வீழ்த்தினால் அவ்வணி நான்கு புள்ளிகளை பெற்றுக்கொள்ளும். பரகுவே நியூசிலாந்தை வீழ்தினாலோ அல்லது சமநிலையில் நிறைவடைந்தாலோ பரகுவேயும் ஸ்லோவேக்கியாவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
எப் பிரிவிலுள்ள நான்கு அணிகளுக்கும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு உள்ளதுடன் ஒரு அணியின் வெற்றிதோல்வியில் மற்றைய அணியின் அடுத்த சுற்றுவாய்ப்பு தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இ பிரிவில் கமருன்,நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியும் டென்மார்க் ,ஜப்பான் அணிகளுக்கிடையிலான போட்டியும் இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறவுள்ளன. இ பிரிவிலிருந்து நெதர்லாந்து அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளதுடன் கமருன் அணி முதல் சுற்றிலிருந்து ஏற்கனவே வெளியேறியுள்ளதால் அவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி இரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தாது என கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இ பிரிவில் நடைபெறவுள்ள தீர்மானிக்க மற்றைய போட்டியில் டென்மார்க்கும் ஜப்பானும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றியையும் ஒவ்வொரு போட்டியில் தோல்வியையும் தழுவியுள்ளன.
இரண்டு அணிகளும் தலா முன்று புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் ஜப்பான் இரண்டாம் இடத்திலும் டென்மார்க் முன்றாம் இடத்திலும் உள்ளன.
இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் காணப்படுவதுடன் போட்டி சமநிலையில் நிறைவடைந்தால் ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ,
திகதி:25 06 2010 - 05:37:47 நிருபர்:001