முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






கானா கால்இறுதியில், அமெரிக்கா வெளியில்
உலகக் கிண்ண உதைப்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் 'சி' பிரிவில் முதலிடம் பிடித்த அமெரிக்கா,'டி' பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த கானாவை ரஸ்டன்பர்க்கில் எதிர்கொண்டது.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கானா போட்டி ஆரம்பமாகி 5ஆவது நிமிடம் கோல் அடித்து முன்னிலை பெற்றது.

மைதானத்தின் மத்திய பகுதியில் இருந்து தனி ஆளாக பந்தை கடத்தி வந்து கோலாக மாற்றினார் கெவின் பிரின்ஸ் போடங். கோல் வாங்கிய அமெரிக்கா பதில் கோல் அடிக்க போராடியது.

முதல்பாதியில் பலன் இல்லை. பிற்பாதியில் 62வது நிமிடத்தில் பந்தை கடத்தி வந்த அல்டிடோரை காலை இடறி கீழே விழ வைத்தார் கானாவின் ஜோனதான் மென்சா.கானாவின் பெனால்டிக் பகுதிக்குள் இது நடந்தது. மென்சாவுக்கு மஞ்சள் அட்டை வழங்கிய நடுவர் அமெரிக்காவுக்கு சாதகமாக பெனால்டியும் வழங்கினார்.

இதனை பயன்படுத்தி டோனவான் கோல் அடிக்க ஆட்டம் சமநிலையடைந்தது. இதன்பிறகும் இரு அணிகளும் பல முறை கோல் அடிக்க முயன்றன. அமெரிக்காவுக்கு கிடைத்த பல வாய்ப்புகளை கானா கோல்கீப்பர் கிங்ஸ்டன் சிறப்பாக செயல்பட்டு தடுத்துவிட்டார். நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டம் சமநிலையில் முடிய கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

கூடுதல் நேரத்தில் 93வது நிமிடத்தில் கானா இரண்டாவது கோல் அடித்தது. இந்த கோலை அசமா கீயான் அடித்தார். இதனால் கானா 2-1 என்று முன்னிலை பெற்றது. கூடுதலாக கொடுக்கப்பட்ட 30 நிமிடத்தில் மேற்கொண்டு இரு அணிகளாலும் கோல் அடிக்க இயலவில்லை. இறுதியில் ஒட்டு மொத்த ஆப்பிரிக்க மக்களின் நம்பிக்கையை சுமந்து கொண்டு கால் இறுதிக்குள் நுழைந்தது கானா. திகதி:28 06 2010 - 11:21:38 நிருபர்:001
அச்சு வடிவம் |

 


தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்