|
தமிழிற்கோர் சரணலயம்
தமிழ் பிறந்த தாய்த் தமிழ்நாட்டில் தமிழெது, ஆங்கிலமெது, வடமொழியெது
என்பது புரியாது கலப்புற்று அன்னிய மொழியின் ஆதிக்கத்தால் நலிந்து அழிந்து
செல்கின்றது. இதைப்பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருந்தாலும் மாற்ற
முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆங்கிலம் என்பது தமிழ் நாட்டைப்
பொறுத்தவரையும் மிகவும் அவசியமாகும். அன்னிய மானிலங்களில் இருந்து
வருபவர்களோடு சேர்ந்து வேலை செய்யவும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் அது
இன்றி அமையாததாகும். ஒரு கூட்டாட்சியில் உள்ள மானிலத்திற்கு ஆங்கிலம்
என்பது இன்றிஅமையாததாகும். ஆனால் தமிழ் நாட்டில் ஆங்கிலத்தை
த்தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தும் மொழியாகப் பாவிப்பதோடு மட்டும் அது நின்றுவிடவில்லை.
அதை ஒரு
கெளரவச்சின்னமாக எடுத்துக் கொண்டு தமது தாய்மொழியை கெளரவக்கேடாக
எண்ணும் மனப்பாண்மையைப் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கிறது. அதுவும்
கல்வியறிவில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் இந்த மனப்பாண்மை மிகவும்
அருவெருப்பையே உண்டு பண்ணுகிறது.
தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்றினுள் ஒன்று கலந்து வேறுபாடு உணராது
கதைப்பது சிலவேளை கவலையையும் சிலவேளை நகச்சுவையையும்
உண்டுபண்ணும்.
இதற்கோர் உதாரணத்தைக் கூறலாம்.
சென்னையில் ஒரு தபால் நிலையத்திற் சென்று இரண்டு ரூபாய்க்கு
முத்திரை தாருங்கள் என்று ஒருவர் கேட்டார். முத்திரை விற்பவர் ஒருகணம் புரியாது
விழித்தார்.
பின்பு சிறிது எரிச்சலோடு
"என்னய்யா முத்திரை" என்றார். இவர் கடிதத்தைக் காட்டி
"இதில்
ஒட்டுவது" என்றார்.
"ஓ அதுவா ஸ்ராம் எண்டு தமிழ்ல சொல்லையா" என்றார்.
"ஓ ஸ்ராம் எண்டு
தமிழில் சொல்வதா?" அவனுக்கு ஸ்ராம் என்பது தமிழ். அவர்கள் பிறந்தது தொடக்கம்
இப்படி
ஆங்கிலத்தை தமிழாக எண்ணிப் பாவித்து வருகிறார்கள்.
இது ஓருவிதத்தில் தமிழ் மொழி சீரழிப்பு என்பது புரியாது பரையோடிப்போய்
உள்ளது. தமிழ்நாட்டில் நலிவடைந்த தமிழை வலுவுட்டி செம்மை படுத்தினாலும்
செந்தமிழாகுமா ? என்பது
கேள்விக்குறியே.
இலங்கையை விட்டு இந்தியாவை விட்டு வெளியேறிவர்களின் தமிழ் இரண்டாம்
மூன்றாம் தலைமுறையோடு மலேசியத் தமிழர்கள் போன்று பெயரில்
மாத்திரம் தான் தமிழ் வாழும்.
இலங்கையில் இப்படியே யுத்தம் நடந்து கொண்டே இருந்தால் தமிழர்களின் வெளியேற்றமும்
சிங்களக் குடியேற்றமும் தடுக்க முடியாத ஒன்றோடு, தமிழின் தனித்தன்மையும்
சிதைக்கப்படும்
என்பதில் ஐயம் இல்லை. இந்த நடவடிக்கை சிங்கள அரசிற்கும் இந்திய மத்திய அரசிற்கும்
அனுகூலமாய் அமைந்தாலும் தமிழின் சரித்திரத்தில் ஒரு இருண்ட காலம் காத்திருக்கிறது.
அந்த இருண்டகாலத்தில் தமிழ் அழியப்போகும் மொழிகளில் ஒன்றாகும் என்பதை நாம்
இப்படியே வாழாது இருந்தால் தவிர்க்க முடியாது போய்விடும்.
அது பின்பொரு சோகமான வரலாற்றுச்
சுவடாகும்.
தமிழ்நாட்டைப் பிரிப்பதோ, அல்லது தமிழ்மானிலமாக இருந்து கொண்டே தமிழைக் காப்பதோ,
நடைமுறையில்
அங்கு சாத்தியப்பாடாத ஒன்றாகும். அதற்காக கிட்டத்தட்ட எழுகோடி
தமிழர்கள் உலகத்தில் இருந்தும் தமிழ் அழிந்து போவது அவமானமானதும் அநீதியானதும்.
இந்த ஏழுகோடி தமிழர்களின் தமிழிற்கு சரணாலயம் இந்தியாவிலோ மலேசியாவிலோ
அமைக்க முடியாது என்பதோடு இன்னும் சிலகாலம் வாழாதிருந்தால்
இலங்கைத் தீவிலும் இயலாத காரிமாகிவிடும். இதை நாங்கள் தவிர்த்து தமிழ் என்ற
ஒருமொழி ஒருநாட்டின் மொழியாகச் செழித்து செம்மையாக வாழவேண்டு மென்றால் அதற்கு
தமிழீழம் என்கின்ற சரணாலயம் ஐனநாயக விழுமியங்களோடு அமைந்தாக வேண்டும்.
அந்தக்காரியம் இலங்கைத் தமிழர்களின்
போராட்டத்தால் மாத்திரம் பெற்றுவிடமுடியாது என்பதும், தமிழ்நாட்டுத் தமிழர்களின்
போரட்டத்தால் தான் இந்திய மத்திய அரசின் ஆசீர் வாதத்தோடு வங்கதேசம் போன்று,
இலங்கைத்தீவில் தமிழீழம் பர்ணமிக்க வேண்டும்
என்பதும் தாய்நாட்டுத் தமிழர்களின் ஆத்ம விருப்பாக வேண்டும். அந்த
விருப்பாலேதான் தமிழிற்கு சரணாலயம் அமையும்.
அது நிலைத்து நிமிர்ந்து நிற்கும்.
வங்கத்தை உருவாக்கிய இந்தியாவுக்கு, இந்திய ஐக்கியத்திற்காக பாடுபடும்
தமிழ்நாட்டிற்கு
நன்றிக்கடனாக தமிழீழத்தையும் அதில் தமிழுக்கோர் சரணாலத்தையும் அமைக்க முடியாது
என்று யாராலும் வாதிடமுடியாது. தமிழீழம் என்கின்ற தேசம் தமிழுக்கு
ஒருசரணலாயமாகும் போது
அது இந்தியாவின் ஐக்கியத்திற்கு தமிழர்களின் நன்றிக்கடனாகும். அதைவிடுத்து தமிழ்
சிதைந்து
கொண்டு சென்றால் இன்றைய பிரமணேயம் மங்கிப் போகும் போது அடிமட்டத்தமிழர்களின்
அபிலாசை இந்திய ஐக்கியத்திற்குக்கூட அழிவை ஏற்படுத்தலாம்.
தமிழிற்கோர் சரணாலயம் அமையவேண்டும் என்றால் அது தமிழ்நாட்டுத்
தமிழர்களின் அதீத அழுத்தத்தால் இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்தோடு
விரைவில் அமையவேண்டும். அதுதான் இலங்கைத் தமிழர்களையும்,
தமிழையும் காப்பாற்றி,
தமிழ்நாட்டு மக்களின் ஆத்ம திருப்திப்திக்கும் உரமூட்டி, இந்திய ஐக்கியத்திற்கு தமிழர்களின் ஆதரவையும் சேர்க்கும்.
தமிழ்ப்பித்தன்
|