லண்டனில் ஐந்து வயது முதல் செக்ஸ் கல்வி?
வளரும் பராயத்தினரிடையே பாலியல் அறிவின் அவசியம் குறித்து பிரித்தானியாவின் சுகாதார கண்காணிப்பு நிலையத்தினர் ஆய்வொன்றை நடத்தியுள்ளனர். அதன்பிரகாரம் தமது நாட்டில் ஐந்து வயது முதல் செக்ஸ் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வமைப்பின் அதிகாரியொருவர் குறிப்பிடுகையில், “மனித கலாசாரம் பாதிக்கப்படாத வகையில் படிப்படியாக செக்ஸ் கல்வி போதிக்கபட வேண்டும். பாலியல் நோய்கள் தொடர்பில் சிறுவயது முதலே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுதல் அவசியமாகும்.
உறவுகளை சரியான முறையில் பேணுவது எவ்வாறு என்பதும் தவறான கண்ணோட்டமில்லாமல் மற்றவரை அணுகுவது தொடர்பிலும் சிறுவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் ஐந்து வயது முதல் அதனைக் கற்பிப்பதில் தவறில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
திகதி:19 06 2010 - 03:15:52 நிருபர்:001