அமெரிக்காவில் இந்தியர் அடித்துக் கொலை
அமெரிக்காவில் சீமென்ஸ் நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திவ்யந்து சின்கா (49) என்பவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த இவர், நியூஜெர்சி நகரில் உள்ள ஓல்ட் பிரிஜ் என்ற இடத்தில் வசித்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இவர் தன் வீட்டினருகே, அவரது 2 புதல்வர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது, இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காரில் வந்த 3 இளைஞர்களே திவ்யந்து சின்காவையும் அவரது புதல்வர்களையும் அடித்துத் தாக்கியுள்ளனர். மூவரும் படுகாயம் அடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி திவ்யந்து சின்கா உயிரிழந்தார்.
இது தொடர்பாக பொலிசார் சம்பந்தப்பட்ட 3 நபர்களையும் கைது செய்தனர். எதற்காக அவர்கள் தாக்கினார்கள் என்ற விவரம் வெளியிடப்பட வில்லை. இனவெறி காரணமாக தாக்குதல் நடந்ததா என்றும் தெரியவில்லை.
அமெரிக்கப் பொலிசார் இதுபற்றி கூறும்போது, விசாரணை முற்றிலும் முடிந்த பிறகே தகவல் சொல்ல முடியும் என்று கூறி விட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
திகதி:30 06 2010 - 06:36:13 நிருபர்:001