சீனாவில் தொடர் மழை; நிலச்சரிவு : 107 பேர் பலி! _
இதில் அப்பகுதியை சேர்ந்த 38 குடும்பத்தை சேர்ந்த 150 பேர் சேற்றுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் 600 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதற்குள் 107 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அப்பகுதியில் மேலும் பல கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் பலர் மண்ணுக்குள் புதைந்து கிடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் மற்றும் கிழக்கு சீன பகுதிகளில் இந்த மாதத்தில் பெய்த கடும் மழையினால் 235 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 2.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீனா முழுவதிலும் உள்ள 69 மில்லியன் மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக ஆய்வாளர்களின் கணிப்பொன்றில் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் ஏராளமான நிதி உதவி தேவைப்படுவதாகவும் சீன அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திகதி:30 06 2010 - 06:41:27 நிருபர்:001