முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






ரஷ்யாவுக்கு உளவு வழங்கிய 10 சந்தேக நபர்கள் அமெரிக்காவில் கைது
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் எப்.பி.ஐ. நீண்ட காலமாக நடத்திய விசாரணைகளையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாதாரண குடிமக்களைப் போன்றும் தம்பதியரைப் போன்றும் நீண்ட காலமாக இவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்கா தொடர்பான தகவல்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு இந்தக் குழுவினர் அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அணுவாயுதம், அமெரிக்க ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள், வெள்ளை மாளிகை வதந்திகள், சீ.ஐ.ஏ நிர்வாக மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விபரங்கள் தொடர்பில் இவர்கள் தகவல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் நீண்ட கால உளவுப் பணிகளுக்காக கடமையில் அமர்த்தப்பட்டவர்கள் எனவும், பொதுமக்களைப் போன்று வாழ்ந்து தகவல்களை வழங்கும் பொறுப்பு இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பல ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. திகதி:30 06 2010 - 06:42:43 நிருபர்:001
அச்சு வடிவம் |

 


தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்