முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






பிலிப்பைன்ஸின் 15ஆவது ஜனாதிபதியாக பெனிக்னோ அகியூனோ
இவர், கடந்த மே மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 15 மில்லியனுக்கு அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியதுடன் இவருடன் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ஜோசப் எஸ்ட்ரெடாவை விட 5.7 மில்லியன் அதிக வாக்குகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் முன்னாள் ஜனாதிபதி கொரஸொன் அகியூனோ மற்றும் அவரது கணவர் பெனிக்னொ ஆகியோரது புதல்வராவார்.

பெனிக்னொ எதிர்க்கட்சியினரால் 1983 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் முன்னாள் பிலிப்பைன்ஸ் சர்வதிகாரி பெர்டினட் மார்க்கஸைப் பதவியிலிருந்து அகற்ற முற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மனைவியான கொரஸொன் அகியூனோ 1986-1992 ஆம் ஆண்டு வரை நாட்டின் ஜனதிபதியாகப் பதவி வகித்தவர். இவரது காலப்பகுதியில் வறுமையும், கடன் சுமையும் இவருக்குப் பெரும் சவாலாகக் காணப்பட்டன.

தற்போதைய ஜனாதிபதி பெனிக்னோ அகியூனோ, முன்னாள் ஜனாதிபதியாக இருந்த தனது தாயின் வழியைப் பின்பற்றி, நாட்டின் வறுமை நிலைக்கு எதிராகப் போராட உள்ளதாகத் தெரிவித்திருக்கின்றார்.

கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலேயே இவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார். இவரது பதவியேற்பு பெரும்பாலான மக்கள் மத்தியில் நடைபெற்றது. திகதி:30 06 2010 - 06:46:49 நிருபர்:001
அச்சு வடிவம் |

 


தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்